பிலியந்தல - மஹரகம வீதி தற்காலிகமாக மூடல்




பிலியந்தல - மஹரகம வீதியை இரவு வேளைகளில் தற்காலிகமாக மூட பொலிஸார் தீர்மானித்துள்ளனர். 

குறித்த வீதியின் புனரமைப்புப் பணிகளுக்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. 

இதன்படி நேற்று முதல் எதிர்வரும் 23ம் திகதி வரை, இரவு 09.00 மணி தொடக்கம் காலை 05.00 மணிவரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். 

குறித்த காலப் பகுதியில் மாற்று வீதிகளாக கொழும்பு - ஹொரன பிரதான பாதையின் கடுவாவல சந்தி ஊடாக மஹரகம பிலிகா வைத்தியசாலை வழியாகவும், பிலியந்தலை - கொட்டாவ வீதியின் திகன சந்தி ஊடாக மொரகெடிய சந்தி வரை சென்றும் மஹரகமவிற்கு பயணிக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.