கிளிநொச்சி குளங்கள் உடைப்பெடுக்காது




கிளிநொச்சி குளங்கள் உடைப்பெடுக்கும் வாய்ப்புகள் இல்லை என கிளிநொச்சி நீர்பாசன பொறியியலாளர் குணரத்தினம் செந்தூரன் தெரிவித்துள்ளார் 
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், கிளிநொச்சியில்  பெய்து வரும் மழையால் அனைத்து குளங்களுக்கும் நீர் வந்தவாறே உள்ளது ஆனாலும் குளங்களின் நீர் மட்டங்களை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவிற்கு குறைத்திருப்பதாகவும் இதற்காகவே நாமும் எமது ஊழியர்களும் 24 மணிநேரமும் கடமையில் ஈடுபட்டிருகின்றோம் .
எமது கட்டுப்பாட்டில் உள்ள ஒன்பது குளங்களும் அதாவது இரணைமடு, அக்கராயன்,வன்னேரி, கரியாலை நாகபடுவான், குடமுருட்டி, புதுமுறிப்பு கனகாம்பிகை, கல்மடும் பிரமந்தலாறு ஆகிய குளங்கள் எமது 24 மணிநேர கண்காணிப்பில் இருப்பதாகவும் உடைப்பெடுப்பதற்கு எந்தவித சாத்திய கூறுகளும் இல்லை எனவும்  இக் குளங்களை அண்மித்து வாழ்கின்ற மக்களும் தாழ் நிலங்களில் வாழ்கின்ற மக்களும் குளம் உடைப்பு சம்பந்தமாக எவ்வித பயமும் கொள்ளத்தேவையில்லை என தெரிவித்தார்.இதேவேளை  மழையுடன் கூடிய காலநிலை நீடிக்கின்து