(ஹுஸைன்)
எதிர்வரும் 2016 ஜனவரி முதல் பஸ்ஸினுள் பிச்சையெடுப்பதையும் வியாபாரம் செய்வதையும் முற்றாகத் தடை செய்யவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
பஸ்ஸினுள் பிச்சையெடுப்பவர்கள் மற்றும் வியாபாரம் செய்வோரை கைது செய்யுமாறு பொலிஸ்மா அதிபரை தான் கேட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பஸ்களினுள் யாசகம் செய்பவர்களும் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களும் பஸ்களினுள் உள்ள பயணிகளுக்கு இடைஞ்சலையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதாக பயணிகளிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டிற்கமையவே இந்த தீர்மானத்தை தாம் மேற்கொணடுள்ளதாகவும் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டார்.
இதேவேளை பஸ்களினும் கண்ணாடிகளையும், போத்தல் ஓடுகளையும், மின்குமிழ்களையும் உண்ணுதல் போன்ற பகுத்தறிவுக்குப் பொருத்தமில்லாத மாயாஜால செயற்பாடுகளையும் பயணிகள் வெறுத்துக் கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதுபோன்ற நடத்தைகள் சிறுவர்களிடையே ஆபத்தான அறிவற்ற செயற்பாடுகளுக்கு இட்டுச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

