.
-ஹுஸைன்
கிழக்கு மாகாணத்தில் உள்ள 15 பிரதேச, ஆதார, மாவட்ட வைத்தியசாலைகளில் கடமையாற்றும் பொருட்டு 40 புதிய தாதி உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் திங்கட்கிழமை மாலை திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கே. முருகானந்தன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சுகாதாரம், மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் இந்த நியமனங்களை வழங்கி வைத்தார்.
திருகோணமலை 17, மட்டக்களப்பு 14, அம்பாறை 9 தாதி உத்தியோகத்தர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் வைத்தியசாலை 6, கிண்ணியா வைத்தியசாலை 6, புல்மோட்டை வைத்தியசாலை 1, தோப்பூர் வைத்தியசாலை 1, ஈச்சிலம்பற்று வைத்தியசாலை 1, தம்பலகாமம் வைத்தியசாலை 1,
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை வைத்தியசாலை 6, ஏறாவூர் வைத்தியசாலை 3, கழுவாஞ்சிக்குடி வைத்தியசாலை 3, காத்தான்குடி வைத்தியசாலை 2
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் வைத்தியசாலை 4, பொத்துவில் வைத்தியசாலை 2, அட்டாளைச்சேனை வைத்தியசாலை 2, சம்மாந்துறை வைத்தியசாலை 1 என்ற அடிப்படையில் தாதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
