சென்னை, காஞ்சிபுரத்தில் வெள்ளம் வடிந்த பகுதிகளில் 100 சடலங்கள் மீட்பு.வெள்ளம் வடிந்த பகுதிகளில் மீட்புப் பணியின் போது சடலங்கள் மீட்பு.காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை.திருவாரூர், #கடலூர், நாகையில் பேய்மழை - புதுச்சேரியிலும் கனமழை.
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்கான மிகப்பெரிய அளவிலான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்திய ராணுவத்தினரால் இதுவரை இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படகுகள் மற்றும் நிவாரணப் பொருட்களை கொண்டுச்செல்லும் பணியில் இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை சென்னை விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கான ரயில் சேவைகளும் பெருமளவு நிறுத்தப்பட்டுள்ளன.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட காற்றழுத்தம் காரணமாக, தமிழ்நாட்டின் கரையோரப் பகுதிகளில் கடும் மழை பெய்துள்ளது.
