வட, கிழக்கில் வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு! ஐரோப்பிய ஒன்றிய தூதுவா்




வடக்கு கிழக்கில் வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கான தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அனைத்து உதவிகளை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கவுள்ளது.
இந்தத் தகவலை இலங்கை மற்றும் மலேசியாவுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டேவிட் டலி தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள இளைஞர் யுவதிகள் தொழில்வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளும் வகையில் தொழில் மத்திய நிலையம் நேற்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது.
மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான தூதுவர் டேவிட் டலி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.