பெரும்பாலான ஊடகவியலாளர்கள் வடக்கிலேயே கொல்லப்பட்டனர்





கடந்த ஆட்சி காலத்தில் 44 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, அதிகளவான ஊடகவியலாளர்கள் வட மாகாணத்திலேயே கொல்லப்பட்டுள்ளதாகவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
எனினும், ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்ட காலம் நிறைவடைந்துள்ளதாகவும், இனிவரும் காலங்களில் அவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறாது எனவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஆட்சிக்காலத்தில் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நட்டஈட்டை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய பிரதமர், தற்போதுள்ள ஊடகவியலாளர்களுக்கான சலுகைகளை அதிகரிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்