வரவு செலவுத் திட்டம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இன்று மாலை நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பில் தொழிற்சங்கங்கள் இருவேறு நிலைப்பாடுகளிலுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரசு, பகுதி அரசு மற்றும் தனியார் பிரிவுகளுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்கள் தொடர்பிலான இந்தக் கலந்துரையாடல் அலரி மாளிகையில் நடைபெற்றது.
இதன்போது நாட்டின் அனைத்து தனியார் மற்றும் அரசதுறை பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

