பாரீஸ் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் அவசரமாக தரை இறங்கிய விமானம்




San-FranciscoParis

.

ஆனால் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, அதில் வெடிகுண்டு வைத்திருப்பதாக திடீர் மிரட்டல் வந்தது.
இதையடுத்து அந்த விமானம், கனடா நாட்டில் உள்ள மாண்ட்ரீல் நகருக்கு திருப்பி விடப்பட்டு அங்கு அவசரமாக தரை இறக்கப்பட்டது.
அப்போது அங்கு தயார் நிலையில் 15 தீயணைப்பு வண்டிகள் நிறுத்தப்பட்டிருந்தன. வெடிகுண்டு செயலிழப்பு படையினரும் வரவழைக்கப்பட்டிருந்தனர். விமானம் தரை இறங்கியதும் பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து அந்த விமானம், அங்குலம் அங்குலமாக சோதனையிடப்பட்டது. ஆனால் அதில் வெடிகுண்டு எதுவும் சிக்கியதாக தகவல் இல்லை. இருப்பினும் பாரீஸ் நகரில் கடந்த மாதம் 13-ந் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 130 பேரை கொன்று குவித்த நிலையில், அங்கு செல்லக்கூடிய விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்தது, பயணிகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி விட்டது.