-
-ஹுஸைன் -
மட்டக்களப்பு சர்வமத ஒன்றியத்தின் சமய நல்லிணக்கத்திற்கான வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வு வியாழனன்று மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற சமய மற்றும் சமூக நலன் சார்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் 2016ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு, கல்லடி, காத்தான்குடி ஏறாவூர், செங்கலடி ஆகிய பிரதேச சர்வமத ஒன்றிய தலைவர்கள்,செயலாளர்கள் மற்றும் ஒன்றியத்தின் உறுப்பினர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு எஹெட் கரித்தாஸ் நிறுவன அனுசரணையுடன் இயக்குனர் அடிகளார் ஜிரேன் டிலிமா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு பல்கலைகழக விரிவுரையாளர் அடிகளார் நவரெட்ணம் நவாஜி சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டார்.
