வாட்ஸ் அப் சேவை பிரேசிலில் நீதிமன்றத்தால் 48 மணி நேரத்துக்கு நிறுத்திவைப்பு
உலக அளவில் பிரபலமான தொலைபேசி குறுஞ்செய்திச் சேவையான வாட்ஸ்ஆப் பயன்பாட்டை, பிரேசில் அதிகாரிகள் தடை செய்துள்ளனர்.
குற்றவியல் வழக்கு ஒன்றில், நீதிமன்றம் உத்தரவுக்கு கீழ்படிய மறுத்த கலிஃபோர்னிய நிறுவனமான வாட்ஸ் அப்பின் சேவையை 48 மணி நேரம் நிறுத்தி வைக்குமாறு, சோ பௌலோ மாநில நீதிபதி ஒருவர் உத்தரவிட்டார்.
உலகின் மற்ற பகுதிகளிலிருந்து பிரேசில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதைக் காண்பது கவலையளிப்பதாக வாட்ஸ்ஆப் இன் தலைமை நிர்வாகி ஜான் கோம் தெரிவித்துள்ளார்.
வாட்ஸ்ஆப் மீதான தடை அமுலுக்கு வந்த சிலமணிகளுக்குள் அதன் போட்டி சேவை நிறுவனம் ஒன்று 10 இலட்சத்துக்கும் அதிகமான புதிய பயன்பாட்டாளர்களை கையாள்வதாக தெரிவித்துள்ளது.

