கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது




கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

ஓட்டமாவடி, வாழைச்சேனை, தியாவட்டவான், மீறாவோடை போன்ற பகுதிகளில் அண்மைக் காலமாக வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வந்த நிலையில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுனையில் வழிகாட்டலில் நியமிக்கப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் எம்.அருனக்காந் தலைமையிலான பொலிஸ் குழுவினரே இச் சந்தேகநபர்களை கைது செய்துள்ளதுடன், இவர்களால் கொள்ளையிடப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

சந்தேகநபர்கள் 36, 22 மற்றும் 18 வயதுடையவர்கள் என்றும் இவர்களில் இருவர் ஓட்டமாவடி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் மற்றையவர் மாஞ்சோலை கிராமத்தை சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன