அடுத்த ஆண்டு தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டிற்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய தேவை இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் புதிய தேர்தல் முறைமையில் தீர்க்கப்பட வேண்டிய சில சிக்கல்கள் இருப்பதனால் அதனை நடைமுறைப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
