விவசாயிகளுடன் அதிகாரிகள் சிறந்த முறையில் செயலாற்ற வேண்டும்: ஜனாதிபதி




தற்போதுள்ள நீர்பாசன தொழில்நுட்பத்திற்கு ஈடாகின்ற வகையிலான விவசாய கட்டமைப்பு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த விவசாயிகளிடம் காணப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுடன் செயற்படுகின்ற போது நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் விவசாயிகளின் உடல், உள தன்மைகள், அவர்களுடைய அனுபவங்கள் திறமைகள் என்பனவற்றுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
கல்கமுவ கற்கை நிலையத்தின் பாடநெறியை பூர்த்தி செய்த பொறியியலாளர்கள் உதவியாளர்களுக்கான டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் விவசாய அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் பலரும் கலந்துக்கொண்டிருந்தனர்.
தேச பிதா டி.எஸ்.சேனாநாயக்க ஆரம்பித்த விவசாய திட்டம் இன்றும் நாட்டிற்கு பொருத்தமானதாக அமைவதோடு, கால்வாய்கள், நீர்த்தேக்கங்கள் என்பவற்றை அமைத்து அவர் முன்னெடுத்த செயற்பாடு வரவேற்கத்தக்கது என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அத்துடன், தற்போது இலங்கைக்கு கிடைக்கின்ற நீர்வளம் இலங்கையை போன்று 10 மடங்கு பரப்பளவு கொண்ட நீளப்பரப்பில் விவசாயம் செய்வதற்கு போதுமானது எனவும் இங்கு நீர்முகாமைத்துவத்திலேயே சிக்கல்கள் நிலவுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.