டில்லி மாணவி கொலை வழக்கின் 'சிறுபராய- குற்றவாளி' விடுதலை





இந்தியத் தலைநகர் டில்லியில் 2012-ம் ஆண்டில் மாணவி ஒருவர் பலரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டவர்களில் ஒருவர் விடுதலை செய்யப்படுவதை தடுக்க முடியாது என்று டில்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குற்றம் நடந்தபோது 18 வயதுக்கு உட்பட்டவராக இருந்தவரே ஞாயிறன்று விடுதலை செய்யப்படுகின்றார்.
இந்தியாவில் சிறுபராய குற்றவாளிகளுக்கு அளிக்கப்படக்கூடிய அதிகபட்ச தண்டனையான மூன்றாண்டு சிறைத் தண்டனையை அவர் அனுபவித்து முடித்துவிட்டார்.
ஆனால், அவரது தண்டனையை நீட்டிக்க வேண்டும் என்று உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினரும் அரசியல்வாதிகளும் கோரியுள்ளனர்.
இந்த பாலியல் வல்லுறவு சம்பவம் இந்தியா எங்கிலும் பெரும் கண்டன அலையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட ஏனைய மூன்று பேரும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதற்காக காத்திருக்கின்றனர்.