விபத்தில் பலியானவர் வேலனைப் பகுதியைச் சேர்ந்த பதினைந்து வயதுடைய உதயகுமார் உஷாந்தினி என்பவராவார்.
ஊர்காவற்துறை வீதியிலுள்ள வேலணைச்சந்தியில் இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது. மாணவி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
அவரது உடல் தற்போது யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
யாழில் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு
யாழ். அரியாலை பகுதியில் எரிகாயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சடலம் நேற்றிரவு 7 மணியளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.
தனக்குத் தானே தீ மூட்டி இந்த பெண் உயிரிழந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது முதற்கட்ட விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
அரியாலை பகுதியைச் சேர்ந்த 48 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் இன்றைய தினம் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
