இளைஞர்கள் 11 பேர் காணாமற்போன வழக்கு: முக்கிய சாட்சியங்கள் கிடைத்திருப்பதாக அறிவிப்பு
காணாமற்போதல் சம்பவங்கள் தொடர்பில் முக்கிய சாட்சியங்கள் கிடைத்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் இன்று அறிவித்தது.
தெஹிவளை, கொட்டாஞ்சேனை மற்றும் வத்தளை ஆகிய பகுதிளைச் சேர்ந்த 11 இளைஞர்கள் காணாமற்போனமை தொடர்பிலான வழக்கு இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து இன்று நீதிமன்றத்தில் தெளிவுபடுத்திய குற்றப்புலனாய்வுத் திணைக்களம், திருகோணமலையில் நிலக்கீழ் முகாமை சோதனைக்குட்படுத்தியபோது எலும்புகள் சில மீட்கப்பட்டதாக தெரிவித்தது.
இந்த எலும்புக்கூடுகளை மேலதிக பகுப்பாய்வுக்கு உட்படுத்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் அனுமதி கோரினர்.
வழக்கின் முக்கிய சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை வழக்கில் ஆஜராகியுள்ளதால் அவர் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாமற்போனதாக சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் அறிவித்தனர்.
இதற்கமைய, வழக்கு மீண்டும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இன்றைய வழக்கு விசாரணையின்போது சாட்சியமளித்த சாட்சியாளர் ஒருவர், மாதா வீதியிலிருந்த துப்பாக்கிதாரி ஒருவர் நடராஜா ரவிராஜ் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகத் தெரிவித்தார்.
சம்பத் முனசிங்கவுடன், பிரசாத் ஹெட்டிஆரச்சி. காமினி, செனவிரத்ன, வஜிர சாமிந்த ஆகியோரும் இந்த வழக்கின் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
வழக்கு ஜனவரி 29 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.