யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 31ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா சம்பிரதாய மரபு ஒழுங்குகளிற்கு அமைவாக சிறப்பாக இன்று (19) நடைபெற்றது.
இந்த பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தலைமையில் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறுவதுடன் பல்கலைக்கழக வேந்தர் சிரேஷட பேராசிரியர் சி.பத்மநாதன் மாணவர்களுக்குரிய பட்டங்களை வழங்கி கௌரவித்தார்.

