அகதிகள் நெருக்கடி தொடர்பில் பிபிசிக்கு பிரஞ்சுப் பிரதமர் பேட்டியளித்துள்ளார்.
ஐரோப்பாவுக்கு வரும் ஒவ்வொரு அகதியையும் உள்ளே விட்டுக்கொண்டிருந்தால் ஐரோப்பிய சமூகம் மொத்தமாகவே ஆட்டங்காணும் என பிரஞ்சு பிரதமர் மனுவெல் வால்ஸ் எச்சரித்துள்ளார்.
இந்தக் குடியேறிகள் நெருக்கடி ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த எதிர்காலத்துக்குமே மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக பிபிசிக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார்.
குடியேறிகளைக் கரம் நீட்டி வரவேற்கும் விதமான ஜெர்மானிய ஆட்சித்தலைவி அங்கேலா மெர்க்கெல்லின் கொள்கை 'தைரியமான ஒரு விஷயம்' என்று அவர் வர்ணித்தார்.
ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அகதி முகாம்களில் கைத்தொலைபேசிகளில் தெரிய ஆரம்பிக்கும் அளவுக்கு வேகமாகப் பரவுகிற இம்மாதிரியான தகவல்களால், ஒரு இடத்தின் ஜனத்தொகையில் சட்டென பெரிய மாற்றம் ஏற்படக்கூடிய ஆபத்து இருக்கவே செய்கிறது என மனுவெல் வால்ஸ் கூறினார்.
பெரும்பாலும் அகதிகளாக பத்து லட்சத்துக்கும் அதிகமான குடியேறிகள் சென்ற ஆண்டு ஐரோப்பாவுக்குள் வந்தனர்.
ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் வரும் நிலை நீடித்துவருகிறது.