ஆப்பிரிக்க ஒன்றிய படைத்தளத்தை பிடித்ததாக அல் சபாப் அறிவிப்பு

கென்ய எல்லைக்கு அருகே சோமாலியாவின் தெற்கில் உள்ள ஆப்பிரிக்க ஒன்றிய தளத்தை தாம் தமது கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டுவந்துள்ளதாக இஸ்லாமியவாத குழுவான அல் சபாப் கூறியுள்ளது.ஆப்பிரிக்க ஒன்றிய படைத்தளத்தை பிடித்ததாக அல் சபாப் அறிவிப்பு
சோமாலியாவில் சேவைக்காக அனுப்பப்பட்ட ஆப்பிரிக்க ஒன்றிய படையில் பணியாற்றிய கென்ய படையினர் பலரது சடலங்கள் நிலத்தில் வீழ்ந்து கிடந்ததை தாம் பார்த்ததாக எல் அட்டே நகர வாசிகள் கூறியுள்ளனர்.
80க்கும் அதிகமான கென்ய படையினரை கொன்று அவர்களது இராணுவ வாகனங்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை கைப்பற்றியதாக அல் சபாப் கூறியுள்ளது.
அல் சபாப் படைத்தளத்தை கைப்பற்றியதாக கூறுவதை நிராகரித்த சோமாலியாவுக்கான ஆப்பிரிக்க ஒன்றிய படையணியின் பேச்சாளர் ஒருவர், சண்டை இன்னமும் தொடருவதாக கூறியுள்ளார்.
அண்மைய மாதங்களில் அல் சபாப் ஆப்பிரிக்க ஒன்றிய தளங்கள் பலவற்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.