
தமது சங்கம், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக அரச மருத்துவர் அதிகாரிகள் சம்மேளனம் எச்சரித்துள்ளது.
மாலபே தனியார் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களை அரச வைத்தியசாலைகளில் உள்ளக பயிற்சிகளுக்கு அனுமதித்தமை தொடர்பிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சம்மேளனம் அறிவித்துள்ளது.
சம்மேளனத்தின் செயலாளர் நவின் டி சொய்ஸா இது சட்டநடவடிக்கை தொடர்பில் ஆலோசனைகள் இடம்பெறுவதாக குறிப்பிட்டுள்ளார்
இலங்கையின் தனியார் பல்கலைக்கழகங்களை அனுமதிக்க முடியாது என்று ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையில் அமைச்சர் ராஜித, ஜனாதிபதியின் சொல்லை மீறிச் செயற்படுவதாக நவின் டி சொய்ஸா இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் குற்றம் சுமத்தியுள்ளார்
