தெமட்டகொடையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு
தெமட்டகொடை பேஸ்லைன் வீதியில் பாதசாரி கடவையில் சென்ற இருவர் மீது காரொன்று மோதியதில் இரு பாதசாரிகளும் உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய 15 வயது சிறுவன் பொலிஸில் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (16) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் 47 வயதான தாயும் 10 வயதான புதல்வியும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து பேஸ்லைன் பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் காரில் பயணித்தவர் அல்லவென ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.