வெலிமட பகுதியின் பாதுகாப்புக்காக விஷேட அதிரடிப் படையினர் அனுப்பி வைப்ப



பண்டாரவளை - வெலிமட பகுதியில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக, அந்தப் பகுதியின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மதுபான விற்பனை நிலையம் ஒன்றில் இடம்பெற்ற தாக்குதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலேயே அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 31ம் திகதி வெலிமட பகுதியில் மதுபான விற்பனை நிலையத்தில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த இளைஞர் ஒருவர், நேற்று இரவு, பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலியானார்.

இதனையடுத்து பிரதேசவாசிகள் குறித்த மதுபான விற்பனை நிலையத்தைத் தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் அப் பகுதியின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸாருக்கு மேலதிகமாக, விஷேட அதிரடிப் படையினரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை எம்பிலிபிடிய பகுதியில் பொலிஸாருடன் இடம்பெற்ற மோதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் எம்பிலிபிடிய பகுதியிலும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.