மாத்தறையில் எண்ணெய் கசிவு ஏற்படக் கூடிய எண்ணெய் நிரப்பும் நிலையத்திற்கு பூட்டு



நில்வலா கங்கைக்கு எண்ணெய் ஊடுறுவுவதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய எண்ணெய் நிரப்பும் நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவிடுவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. அந்த நிலையத்தை மூடுவதற்கான உத்தரவை இன்றைய தினத்திற்குள் எழுத்து மூலம் வழங்குவதாக அதன் மாத்தறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் சுசந்த வெதகே தெரிவித்தார். 


கசிவு ஏற்படக்கூடிய நிலத்தடியில் உள்ள எண்ணெய் தொட்டிகள் அனைத்தும் தற்போது அகற்றப்பட்டுள்ளதாகவும், நில்வலா கங்கையில் கலக்கப்பட்டுள்ள எண்ணெய்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார். 

இது தவிர மாத்தறை பிரதேசத்தில் நேற்றைய தினம் அமுலில் இருந்த நீர் வெட்டு தற்போது வழமைக்குத் திரும்பம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.