சிரியாவிலுள்ள டியர் அல்-சௌர் நகரின் புறநகர் பகுதியிலிருந்து, இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் தீவிரவாதிகள் 400க்கும் அதிகமானவர்களை கடத்தியுள்ளனர் என சிரிய செயல்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிரியாவின் பல பகுதிகள் ஐ எஸ் தீவிரவாத அமைப்பின் பிடியில் உள்ளதுஒரு தாக்குதலின் பின்னர் இவர்கள் கடத்தப்பட்டுள்ளதாக அந்த செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
அரச கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது ஐ எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 130 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்ட அல்லது கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் அரச ஆதரவு படையினரின் உறவினர்கள் என்று கூறப்படுகிறது.
கடத்தப்பட்ட பலர் ரக்கா நகருக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது
இந்தத் தாக்குதலில் 300 பேர் வரை படுகொலை செய்யப்பட்டனர், அவர்களில் அநேகர் பெண்கள் மற்றும் சிறார்கள் என சிரியாவின் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இவர்கள் சிரச்சேதம் செய்யப்பட்டோ அல்லது சிலுவையில் அறைந்தோ கொல்லப்பட்டுள்ளனர் எனவும் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
கடத்தப்பட்டவர்கள், ரக்காவிலுள்ள ஐ எஸ் அமைப்பின் தலைமையகத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம என சிரிய மனித உரிமைகள் கண்கானிப்பகம் எனும் அமைப்பு கூறுகிறது.
சிரியாவின் பல பகுதிகள் ஐ எஸ் தீவிரவாத அமைப்பின் பிடியில் உள்ளது
ஒரு தாக்குதலின் பின்னர் இவர்கள் கடத்தப்பட்டுள்ளதாக அந்த செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.