தாஜிகிஸ்தானில் தாடி வைத்தவர்கள் மீது போலிசார் அதிரடி மழிப்பு நடவடிக்கை.
தாஜிகிஸ்தானில் ஒரே ஒரு பிரதேசத்தில் மட்டும், சுமார் 13,000 ஆண்களின் தாடிகளை தாங்கள் சமீபத்தில் மழித்துவிட்டதாக போலிஸார் கூறுகின்றனர்.
இஸ்லாமியத் தீவிரவாதம் மற்றும் அந்நிய தாக்கங்களுக்கு எதிராக நடத்தப்பட்டுவரும் நாடளாவிய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசாங்கம் கூறுகிறது.பெண்களும், ஹிஜாப் எனப்படும் தலையங்கிகளை அணியக்கூடாது என்று கோரப்படுகிறார்கள். பல்கலைக்கழகங்களிலும் பள்ளிக்கூடங்களிலும் இந்த ஹிஜாப் அணிய ஏற்கனவே தடை இருக்கிறது.
வலுக்கட்டாயமாக தாடி மழிக்கப்பட்ட ஒருவர் தான் அவமானப்படுத்தப்பட்டது போல உணர்ந்ததாக பிபிசியிடம் கூறினார். இந்த நடவடிக்கை உண்மையில் தீவிரவாதமயமாதலை ஊக்குவிக்கும் என்று அவர் கூறினார்.

