கண்டி நகரில் வளி மாசடையும் வீதம் அதிகரித்துள்ளதாக சுற்றாடல் மற்றும் மஹாவலி அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலை நீடிக்கும் பட்சத்தில் கண்டி நகரில் வாழும் மக்களின் சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் என அமைச்சின் வளி மாசடைவு பிரிவின் பணிப்பாளர் அநுர ஜயதிலக தெரிவித்துள்ளார்.
வளிமாசடைவு காரணமாக கண்டி நகரிலுள்ள புராதன பகுதிகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகரித்துள்ள வாகன நெரிசலும் வளி மாசடைவிற்கான முக்கிய காரணமென வளி மாசடைவு பிரிவின் பணிப்பாளர் அநுர ஜயதிலக தெரிவித்துள்ளார்.

