நிந்தவூர் பிரதான வீதியில் வாகன விபத்தும் வீதி அதிகார சபையின் அசமந்தமும்





(சுலைமான் றாபி)
கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியில் (நிந்தவூர் அட்டப்பள்ளப் பிரதேசத்தில்) இன்று (11.01.2016) சற்று முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில்  மோட்டார் காரின் டயர் வெடித்ததினால் தனது கட்டுப்பாட்டை இழந்த குறித்த வாகனம்  அருகிலிருந்த Celvert (மதகு) வில் மோதுண்டு சேதத்திற்குள்ளாகியுள்ளது.
இதேவேளை இந்த வாகனத்தில் பயணம் செய்த வாகனச்சாரதி தெய்வாதீகமாக  உயிர்தப்பியுள்ளதுடன், இந்த விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையினரே.இது உங்கள் கவனத்திற்கு!
களியோடைப் பாலத்திற்கு அருகில், அட்டப்பளம் துவங்கும் இடத்தில் 2 பெரிய வடிகான் குழாய்களைப் (மதகு)பொருத்துவதற்கென, பிரதான வீதி குறுக்காகத்  துண்டாடப்பட்டு கடந்த சில மாதங்காளகக் காணப்படுகின்றது. பகல் வேளையிலும், இரவு வேளையிலும், இதற்குரிய சமிக்ஞையினை விளங்குவது சாரதிகளுக்குச் சிரமம்.

இதனால் பாதை தெரியாமல் புதிதாக வரும் சாரதிகளுக்கு பெரும் இடைஞ்சல் ஏற்படுவதுடன், சீரற்ற பாதையினால், சாரதிகள் தன்னிச்சையாகவே விபத்துக்களுக்னு ஆட்படுவா்.

எனவே, அதிகார சபை உடனடியாக இவ்வியத்தில் செயற்பட்டு வீதித் தடையினை அகற்றி பாதையினை சீர் செய்யுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.!