நீங்கள் சேவை செய்வது எனக்காக அல்ல நாட்டுக்காக





நாட்டின் அனைத்து நிறுவனங்களையும் நிர்வகிக்கும் முக்கிய இடமான ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றுகின்ற அனைவரும் ஊழல், வீண்விரயம் என்பவற்றை தவிர்த்து மக்களின் குரலுக்கு செவி சாய்க்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


ஜனாதிபதி செயலகத்தில் புதிய வருடத்துக்கான சேவைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

தனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை நிறைவேற்றும் வினைத்திறன் மற்றும் தரம் என்பன, சேவைக் காலத்தில் காணப்படுகின்ற சிரேஷ்டத்துவத்தை விட அதிக பெறுமதியை கொடுப்பதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார். 

"நீங்கள் சேவை செய்வது எனக்காக அல்ல நாட்டுக்காக" என்பதை நினைவில் கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார். 

அரச நிறுவனங்களை நிர்வகிக்கின்ற முக்கிய இடமான ஜனாதிபதி செயலகத்துக்கு நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுகின்ற முக்கிய பொறுப்புள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.