(தகவல்-உள வள ஆலோசகர் தாஹிர்)
அக்கரைப்பற்று 06ம் குறிச்சியினைப் பிறந்தகமாகவும், 01ம் குறிச்சியினை வாழ்விடமாகவும் கொண்ட
அக்கரைப்பற்று அஸ்ஸாஹிரா வித்தியாலய பிரதி அதிபர் அபுசாலி (S.L.P.S)நேற்று மாலை நடந்த ஒரு விபத்தில் கொழும்பு றாகமவில் காலமானாா்.இவர் பயணித்த மோட்டார் சைக்கிள் வாகனமொன்றில் மோதியதில் இவா் மரணமடைந்தார்.
யாழ்ப் பல்கலைக்கழகப் பட்டதாரியான இவர், நீண்ட காலமாக 30 வருட காலமாக புத்தளம் உட்பட பல இடங்களில் ஆசிரியராகப் பணியாற்றிய ஒரு சமூக சேவயாளர்.நல்லடக்கம் இன்றிரவு அக்கரைப்பற்றில் இடம்பெறும் என எதிர்பாா்க்கப்படுகின்றது.
சிலோன்24 தனது அனுதாபங்களை அவரின் பிரிவால் துயருறும் குடும்ப அங்கத்தவர்கட்கு தெரிவிக்கின்றது.

