அனல் பறக்கும் ஆட்ட நிர்ணய சதி



சூடுபிடிக்கும் இலங்கை அணிவீரர்கள் மீதான ஆட்டநிர்ணயக் குற்றச்சாட்டு

இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் ஜெரி வவுட்டர்ஸ் இன்று பொலிஸ் நிதி மோசடி பிரிவில் ஆஜராகியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் இருவரை ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுத்துவதற்கு முயற்சித்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே ஜெரி வவுட்டர்ஸ் பொலிஸ் நிதி மோசடி பிரிவில் ஆஜராகியுள்ளார்.

சாட்சியாளராகவே ஜெரி வவுட்டர்ஸ் பொலிஸ் நிதி மோசடி பிரிவின் முன்னிலையில் ஆஜராகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் தமக்கு ஆட்டநிர்ணத்தில் ஈடுபடுவது தொடர்பில் யோசனை முன்வைக்கப்பட்டதாக இரண்டு வீரர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இலங்கை கிரிக்கெட் சபையினால் பொலிஸ் நிதி மோசடி பிரிவிற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.