யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசு பஸ் வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த நெல் லொறியுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்தனர்.
வவுனியா - ஈரப்பெரியகுளம் - கல்குண்டான் மடுவில் நேற்று குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலும் விபத்துக் குறித்து தெரியவருவதாவது,
கிளிநொச்சியில் இருந்து நெல் ஏற்றிக் கொண்டு மருதங்கடவலை நோக்கிச் சென்ற போது, பின் ரயர் காற்றுப் போனது. இதனால் லொறியை வீதியோரமாக நிறுத்தி ரயர் மாற்றிக் கொண்டிருந்த போதே சொகுசு பஸ் லொறியை மோதியது.
இதன்போது ரயர் மாற்றிக்கொண்டிருந்த மருதங்கடவலையை சேர்ந்த எம்.நஸீர் (வயது 38) ஸ்தலத்திலேயே உயிரிழந்தார் .அத்துடன் அவருக்கு உதவியாக நின்ற மூவர் படுகாயமடைந்தனர். பஸ்ஸில் பயணித்த 5 பயணிகளும் சிறுகாயங்களுக்கு உள்ளாகினர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை நடத்திய பொலிஸார் பஸ்ஸின் சாரதியைக் கைது செய்துள்ளனர்.

