அரசியலமைப்பு சபை சபையொன்றினை உருவாக்குவதற்கான பாராளுமன்ற விசேட செயற்குழு தொடர்பிலான பிரேரணை மீதான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
கடந்த 09 ஆம் திகதி பிரதமரினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைவாக பல தரப்பினர் திருத்தங்களை முன்வைத்துள்ளனர்.
இன்று காலை 09.30 மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் கூடவுள்ளது.
இந்த பிரேரணை தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி சார்பிலும் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த விவாதத்தின் இறுதியில் திருத்தங்களை ஏற்றுக் கொள்ளவதா இல்லையா என்பது தொடர்பில் பாராளுமன்றத்தினாலேயே தீர்மானிக்கப்படவுள்ளது.

