வேகப்பந்து பயிற்றுவிப்பாளர் அனுஷ சமரநாயக்க பணி இடைநிறுத்தம்




இலங்கை கிரிக்கெட் வீரர்களை ஆட்டநிர்ணயத்தில் ஈடுபடுத்த முயற்சித்த குற்றச்சாட்டில் இலங்கை அணியின் வேகப்பந்து பந்து  பயிற்றுவிப்பாளர் அனுஷ சமரநாயக்க மற்றும் உதவிப் வலைப்பந்து வீச்சாளர் கயான் விஷ்வஜித் ஆகியோரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணியிலிருந்து இடைநிறுத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று (18) தீர்மானித்துள்ளது.

நிரந்தர ஊழியரான வேகப் பந்து  பயிற்றுவிப்பாளர் அனுஷ சமரநாயக்க பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக  செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதனைத் தவிர உதவி வலைப் பந்துவீச்சாளரான கயான் விஸ்வஜித்திற்கு எதிர்காலத்தில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் தொடர்புடைய எந்த விதமான நடவடிக்கையிலும் ஈடுபட முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.