(பின்னிணைப்பு)
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் சார்சத்தாவில் உள்ள பச்சா கான் பல்கலைக்கழகத்தின் மீது துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்தியதில் 19 பேர் கொல்லப்பட்டும் 50 பேர் காயமடைந்தும் உள்ளனர்.
பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக பெஷாவரில் உள்ள பள்ளிக்கூடங்களை மூடுவதற்கு அதிகாரிகள் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தனர்.
(செய்தி)
பாகிஸ்தானிலுள்ள பல்கலைக்கழகத்தில் ஆயுததாரிகள் கைவரிசை; எழுவர் பலி 20 இற்கும் மேற்பட்டோர் காயம்
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் சார்சத்தாவில் உள்ள பச்சா கான் பல்கலைக்கழகத்தின் மீது துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்தியதில் 19 பேர் கொல்லப்பட்டும் 50 பேர் காயமடைந்தும் உள்ளனர்.
பச்சா கான் பல்கலைக்குள் நுழைய முயன்ற இவர்கள் குறைந்தது மூன்று பேரையாவது காயப்படுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குண்டுவெடிக்கும் சத்தமும் கேட்டதாக இந்தச் சம்பத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
சார்சத்தா நகரம் பெஷாவரிலிருந்து 50 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது.
உள்ளூர் நேரப்படி காலை 9.30 மணியளவில் பயங்கரவாதிகள் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்ததாக ஜியோ தொலைக்காட்சிக்கு வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அந்தப் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து மாணவர்களும் ஆசிரியர்களும் வெளியேற்றப்பட்டு, காவல்துறை அதனைச் சுற்றிவளைத்துள்ளது.
பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக பெஷாவரில் உள்ள பள்ளிக்கூடங்களை மூடுவதற்கு அதிகாரிகள் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தனர்.(செய்தி)
பாகிஸ்தானிலுள்ள பல்கலைக்கழகத்தில் ஆயுததாரிகள் கைவரிசை; எழுவர் பலி 20 இற்கும் மேற்பட்டோர் காயம்
எனினும் எத்தனை ஆயுததாரிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்பதஞு தொடர்பிலான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. அத்துடன் தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை. இதுவரை ஆயுததாரிகள் நால்வர் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் எவரேனும் பணயக்கைதிகளாக பிடிபட்டுள்ளனரா என்பது தொடர்பிலும் தகவல்கள் வெளிவரவில்லை.
தற்போதும் தாக்குதல் நடவடிக்கை பல்கலைக்கழகத்தினுள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்திலுள்ள 3000 மாணவர்களுக்கும் 600 விருந்தினர்களுக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

