வரவு செலவுத் திட்டத்தில் மீண்டும் சீர்திருத்தம் செய்து பிரதமர் முன்வைத்த அறிவிப்பு தொடர்பில் இரண்டு நாள் விவாதமொன்று அவசியம் என எதிர்க் கட்சியின் பிரதான அமைப்பாளர் அனுர குமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அடுத்த பாராளுமன்றக் கூட்டம் இடம்பெறும் 23 ஆம் 24 ஆம் திகதிகளை இதற்காக ஒதுக்கித் தர வேண்டும் எனவும் அவர் வேண்டியுள்ளார்.
பிரதர் இடைக்கால வரவு செலவுத் திட்டமொன்றை முன்வைத்திருந்தார். தற்பொழுது நேற்று மீண்டும் வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளார். அப்படியானால், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க முன்வைத்தது என்னவாக இருக்கும் எனவும் அவர் நேற்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

