சூரிய கிரகணம்




கிரகணம் என்றாலே, இயல்பாகவே அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் அச்சம் கூடிக்கொள்கிறது. அதுவும் சூரிய கிரகணம் என்றால் அழிவு, ஆபத்து, தீய சக்தியின் உக்கிர தாண்டவம் என்றெல்லாம் சிலர் பேசி வருகிறார்கள். 


அறிவியல் சொல்லும் விளக்கம்:

" சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு செல்லும் போது, சந்திரனின் பகுதி சூரியனை விட பெரிதாக காட்சியளிக்க கூடிய அளவு பூமிக்கு அருகில் வர வேண்டும். அப்படி இருந்தால், அதுவே சூரிய கிரகணம். இது ஒரு அமாவாசை நாளன்று தான் ஏற்படுகிறது. இதனால், சூரியன் முழுவதுமோ அல்லது ஒரு பகுதியோ மறைக்கப்படும். புவியைப் பொருத்தவரை ஓர் ஆண்டில் இரண்டிலிருந்து ஐந்து வரையிலான சூரிய கிரகணங்கள் ஏற்படக்கூடும். ஒருமுறை முழு சூரிய கிரகணம்  உண்டான அதே இடத்திலேயே, மீண்டும் தோன்ற ஏறத்தாழ 375 ஆண்டுகள் ஆகும். முழு சூரிய கிரகணகங்கள், இரண்டு அல்லது மூன்றாண்டுகளுக்கு ஒருமுறையே நிகழ்கின்றன. இது அறிவியல் பூர்வமானது. 

அதேபோல், சூரிய கிரகணம் நிகழ்ந்து சரியாக இரு வாரங்களில் சந்திர கிரகணம் நிகழும். அடுத்த சந்திர கிரகணம் மார்ச் 23 ல் நிகழ இருக்கிறது. 

மார்ச் 9ம் தேதி இந்திய நேரப்படி தமிழகத்தில் அதிகாலை 6.23 முதல் 6.49 வரை 27 நிமிடங்கள் மட்டுமே சூரிய கிரகணம் நிகழ இருக்கின்றன. இலங்கையின் கிழக்கு ப் பகுதி,இந்தியாவின் பிற மாநிலங்களில் குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டுமே காணமுடியும். முழு கிரகணத்தை இந்தோனேஷிய தீவுகளான சுமத்ரா, போர்னியோ, சுலவேசி மற்றும் சில பசுபிக் கடல் பகுதிகளில் 100 சதவீதமும், இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் 50 சதவீதமும் காண முடியும்.