2016முதல் அரசசேவையாளர்களுக்கு புதிய சம்பளஅளவுத்திட்டங்கள்:



அரசாங்கநிருவாக முகாமைத்துவ அமைச்சின் சுற்றுநிருபம் வெளியீடு! 

காரைதீவு  நிருபர் சகா






2016முதல் நாட்டிலுள்ள சகல அரசசேவையாளர்களுக்கும் புதிய சம்பளஅளவுத்திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசாங்க நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு அதற்கான 03.2016 ஆம் இலக்க அரசாங்க நிருவாக சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
தற்போது அமுலிலுள்ள 06.2006 ஆம் இலக்க அரசாங்க நிருவாக சுற்றறிக்கை  மற்றும் அதன் திருத்தங்களுக்கும் பதிலாக புதிய சம்பள அளவுத்திட்டம் 2016.01.01 முதல் அமுலுக்குவருவதாக அமைச்சின் செயலாளர் ஜே.தடல்லகே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பகிரங்கசேவையிலுள்ள 30வகையான அரசதொழில்களுக்கான புதிய சம்பளஅளவுத்திட்டங்கள் புதிய சுற்றுநிருபத்தில் தெளிவாக வெளியிடப்பட்டுள்ளன.

சில அரசசேவைகளுக்கான சம்பளஅளவுத்திட்டங்கள் உதாரணத்திற்காக இங்கு தரப்படுகின்றன.

அதன்படி திறனற்ற ஆரம்ப தர தொழிலாளி ஒருவர் ஆரம்பகட்ட சம்பளமாக 24250ருபாவும் உச்சகட்ட சம்பளமாக 36410ருபாவும் பெறுவார்.
முகாமைத்துவஉதவியாளர் ஒருவர் ஆரம்பகட்ட சம்பளமாக 27140ருபாவும் உச்சகட்ட சம்பளமாக 47990ருபாவும் பெறுவார்.
தாதிய உத்தியோகத்தர் ஒருவர் ஆரம்பகட்ட சம்பளமாக 32525ருபாவும் உச்சகட்ட சம்பளமாக 59035ருபாவும் பெறுவார்.

ஆசிரியர் ஒருவர் ஆரம்பகட்ட சம்பளமாக 27740ருபாவும் உச்சகட்ட சம்பளமாக 71650ருபாவும் பெறுவார்.அதிபர் ஒருவர் ஆரம்பகட்ட சம்பளமாக 35280ருபாவும் உச்சகட்ட சம்பளமாக 82775ருபாவும் பெறுவார்.
பொலிஸார் ஒருவர் ஆரம்பகட்ட சம்பளமாக 29540ருபாவும் உச்சகட்ட சம்பளமாக 55600ருபாவும் பெறுவார்.வைத்தியஅதிகாரி ஒருவர் ஆரம்பகட்ட சம்பளமாக 52955ருபாவும் உச்சகட்ட சம்பளமாக 104355ருபாவும் பெறுவார்.

சட்டமாஅதிபருக்கு ஆரம்பகட்ட சம்பளமாக 139000ருபாவும் உச்சகட்ட சம்பளமாக 153625ருபாவும் பெறுவார்.

சுற்றறிக்கையில் உரி;வரும் 5ஆண்டுகளுக்கான சம்பள அளவுகள் 05கட்டங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.