கல்முனைக் கொலை -சந்தேக நபருக்கு மேலதிக விளக்கமறியல்



கல்முனை சர்வோதய அபிவிருத்தி நிதி நிறுவன  முகாமையாளர் சுலக்சனாவை கொலைசெய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள கொலைச்சந்தேக நபரான பொன்னம்பலம் உதயகுமாருக்கு மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிவான்  பயாஸ்றசாக்  நேற்று உத்தரவிட்டுள்ளார்.

14ஆம் திகதி  திங்கட்கிழமை,சந்தேகநபரான முன்னாள் முகாமையாளர் கொண்டுவரப்பட்டார். சந்தேக நபருக்கு மேலும் 14நாள் விளக்கமறியல்  உத்தரவை நீதவான் பிறப்பித்தார். அதன்படி 28ஆம் திகதி வரை விளக்கமறியல்  வழங்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் சார்பில் நேற்று சட்டத்தரணி எவரும் ஆஜராயிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை   கல்முனையில் சந்தேகநபரான உதயகுமாருக்கான வழக்கில் எந்த சட்டத்தரணியும் ஆஜராகக்கூடாதென்று கோரி ஊர்வலமொன்று இடம்பெற்றதுடன் சந்தேக நபரின் உருவப்பொம்மையும் எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.