ஆல்ப்ஸ் மலையில் பனிச்சரிவு; 6 பேர் பலி March 12, 2016 இத்தாலியின் ஆல்ப்ஸ் மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். 3000 மீட்டர் உயரத்தில் இந்த விபத்து நடந்திருக்கிறது. மேலும் பலர் காணாமல் போயிருக்கும் நிலையில், அவர்களைத் தேடும் பணி நடந்துவருகிறது. ஆஸ்த்ரிய எல்லையை ஒட்டியுள்ள சவுத் டைரோலில் இருக்கும் மோண்ட் நெவோசோவில் மூவாயிரம் மீட்டர் உயரத்தில் இந்தப் பனிச்சரிவு ஏற்பட்டது. தேடுதல் பணியில் மோப்ப நாய்களும் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. Knowledge, Slider