பாகிஸ்தான் 6 விக்கட்டுக்களால் தோல்வி




உலக இருபது 20 உலகக்கிண்ண கிரிகெட் தொடரில் இன்று நடைபெற்ற பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்களால் வெற்றியீட்டியது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைத்தானத்தில் நடைபெற்ற இப்போட்டி மழை காரணமாக தலா 18 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் 5 விக்கட் இழப்புக்கு 118 ஓட்டங்களைப் பெற்றது.
18 ஓவர்களில் 119 ஓட்டங்கள் எனும் இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 15.5 ஓவர்கள் முடிவில் 4 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது