சாதரணதர பரீட்சை முடிவுகள்



வெளியாகியுள்ள 2015ஆம் ஆண்டின் கல்விப்பொதுத்தாரதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் முதல் 10 சிறப்பு முடிவுகளுக்குரிய மாணவர்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள இந்த விபரங்களின் அடிப்படையில் முதல் பத்து இடங்களில்  தமிழ் மாணவர்கள் எவரும் உள்ளடங்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

வெளியாகியுள்ள அப்பட்டியலில்படி,
முதலாம் இடம்- கொழும்பு விசாகா வித்தியாலத்தின் சத்சரணி ஹெட்டியாராச்சி, இரண்டாம் இடம்- கொழும்பு நாலந்தா வித்தியாலயத்தின் சமன் புன்சரா பெற்றுள்ளனர்.
இதேவேளை, மூன்றாம், நான்காம் முறையே தேவி பாலிகா வித்தியாலயத்தின் மெலீனா ரத்நாயக்க, கண்டி மகாமாயவின் இன்டீவரி ரத்நாயக்க, நான்காம் இடம்- நாலந்தா கல்லூரியின் ரயின்டு ஹேரத், ஐந்தாம் இடம்- ஆனந்தா கல்லூரியின் நெவில் வல்பிட்ட, ஆறாம் இடம்- கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தின் ஹிருஸா நெத்சரா,
ஏழாம் இடம்- பானந்துறை சுமங்கல வித்தியாலயத்தின் தருஸி அஞ்சலிக்கா, நீர்கொழும்பு மேரீஸ் ஸ்டெலா கல்லூயின் தினித் ஜெயக்கொடி, எட்டாம் இடம்- காலி சௌத்லேன்ட் கல்லூரியின் அமாயா நாணயக்கார, மாத்தறை ராஹூல வித்தியாலயத்தின் யஸாஸ்வின் வெல்லாப்புலி ஆகியோர் பெற்றுள்ளனர்.
இருப்பினும் மாவட்ட, மாகாண நிலையில் பெற்ற விபரங்கள் இன்னமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
www.dornets.lk என்ற பரீட்சை திணைக்களத்தின் இணைத்தளத்தில் பரீட்சை முடிவுகளை அறிந்து கொள்ள முடியும் எனவும் திணைக்களம் கூறியுள்ளது
கொழும்பு பிரதேச பாடசாலைகளின் பரீட்சை முடிவுகளை இன்று வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் உங்கள் பெறுபெற்றை மொபைல் போன்களூடாகவும் பார்க்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் உங்கள் மொபைல் போன்களில்
EXAMS என ரைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு Index Number ஐ ரைப் செய்து,
Dialog எனில் 7777 என்ற இலக்கத்திற்கும்
Mobitel எனில் 8884 என்ற இலக்கத்திற்கும்
Airtel எனில் 7545 என்ற இலக்கத்திற்கும்
Etisalat எனில் 3926 என்ற இலக்கத்திற்கும்
Hutch எனில் 8888 என்ற இலக்கத்திற்கும்
SMS அனுப்புவதன் மூலம் உங்கள் கைகளில் தவழும் மொபைல் போன்களில் பரீட்சைப் பெறுபேற்றைப் பெற்றுக்கொள்ள முடியும்.
2015 G.C.E. O/L பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியானது. doenets.lk என்ற இணையத்தில் பார்க்கவும்.