சம்பிக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்




அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் வார இறுதிப் பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
சம்பிக்க ரணவக்கவினால் மேற்கொள்ளப்பட்ட விபத்து தொடர்பில் நான்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் சட்டத்தை மதிக்காது அரச அதிகாரத்தைப் பயன்படுத்தல், பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸ் ஆணைக்குழுவினை நியமிக்கும் அரசியல் அமைப்புப் பேரவையின் உறுப்பினராக கடமையாற்றுதல் போன்ற காரணிகளின் அடிப்படையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டவரப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.