-எஸ்.ரி.ஜமால்டீன்-
அக்கரைப்பற்று பிரதான வீதி மர்கஸ் பள்ளிவாசல் முன்னால் வைத்து நேற்றிரவு (19) இரவு 11.30 மணியளவில் தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளர் யூ.எல்.உவைஸ் என்பவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்குள்ளானவர் தனது இடது கையில் காயம் ஏற்பட்ட நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிசார் தொரிவித்தனர்.
வீதி ஓரத்தில் நபரொருவருடன் கதைத்துக்கொண்டிருக்கும் போது முச்சக்கர வண்டியிலும், மோட்டார் சைக்கிளிலும் பொல்லூகள்,வாள் என்பவற்றுடன் வந்த சிலர் தன்மீது தாக்குதல் நடத்தியதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.
