தலைவர்களை காணாமல் போக செய்வது தற்போதைய அரசின் கொள்கை அல்ல





















நாட்டினுள் ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஒரு பின்னணியில், கூட்டங்களையும் பேரணிகளையும் நடத்துவதற்கான சுதந்திரம் அனைவருக்கும் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். 

அவ்வாறு கூட்டங்களையும் பேரணிகளையும் நடத்தும் தலைவர்களை காணாமல் போக செய்வது தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை அல்ல என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். 



இன்று நண்பகல், அட்டாளைச்சேனை பாலமுனை பொது விளையாட்டரங்கில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19வது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். 



எவ்வாறான கோஷங்களை எழுப்பினாலும் எதிர்வரும் 05 ஆண்டுகள் வரை அரசாங்கத்தை மாற்றுவதற்கு எவருக்கும் முடியாது என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.