இலங்கையில் பெருந்தோட்டங்களை பகிர்ந்தளிப்பதாக இருந்தால், அதைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என அமைச்சர் திகாம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
மலையப் பகுதி மக்கள் தொடர்ந்து நலிந்த நிலையிலேயே உள்ளனர்
பெருந்தோட்டங்களை தொழிலாளர்களுக்கும் தோட்ட நிர்வாகங்களுக்கும் சம அளவில் பகிர்தளிப்பது தொடர்பான யோசனையை, அரசாங்கத்தின் பங்காளியான தொழிலாளர் தேசிய தொழிற்சங்கம் கடுமையாக எதிர்கிறது என அதன் தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வகையில் பெருந்தோட்டங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என நுவரேலி
யா மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் கூறினார்.
தேயிலைத் தோட்டங்களை தொழிலாளர்களுக்கும் தோட்ட நிர்வாகங்களுக்கும் சம அளவில் பகிர்ந்தளிப்பது தொடர்பாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸநாயக்கா அண்மையில் யோசசையொன்றை வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் உரையாற்றிய அமைச்சர் பழனி திகாம்பரம் தேயிலை தொழிற்சாலைகள் மட்டுமே நிர்வாகத்திடம் இருக்க வேண்டுமே தவிர தோட்டங்கள் அல்ல என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே இனிவரும் காலங்களில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பெண்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் என அக்கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் அறிவித்துள்ளார்.
விரைவில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மலையகத்திலுள்ள படித்த பெண்களை தயாராகுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்