இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான ட்ரான்ஸ்போமரில் ஏற்பட்ட சேதம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த விஷேட நிபுணர்கள் இருவர் நாளை இலங்கை வரவுள்ளனர்.
குறித்த ட்ரான்ஸ்போமரை தயாரித்த நிறுவனத்தில் இருந்தே இவர்கள் வரவுள்ளதாக, மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின், அபிவிருத்திப் பணிப்பாளர் சுலக்ஷன ஜெயவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பியகம பகுதியிலுள்ள உப மின் நிலைய ட்ரான்ஸ்போமரில் சேதம் ஏற்பட்டதோடு வௌ்ளிக்கிழமை ஜா-எல - கடுகொட பிரதேசத்திலுள்ள ட்ரான்ஸ்போமரில் சேதம் ஏற்பட்டது.
இது தொடர்பில் குறித்த ஜேர்மன் நிபுணர்கள் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக, சுலக்ஷன ஜெயவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

