வடகொரியா தன்னுடைய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை தேடுகின்றது




வடகொரியா காணாமல் போன தன்னுடைய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றைத் தேடிக்கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நீர்மூழ்கி ஒன்றில் வடகொரிய அதிபர் கிம் யோங் உன் (கோப்புப் படம்).
இவ்வாரத் துவக்கத்தில் இந்தக் கப்பலுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.
வடகொரிய கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் இந்தக் கப்பல் நீண்ட காலமாக இயங்கிவந்தது.
தென் கொரியாவும் அமெரிக்காவும் மிகப் பெரிய அளவில் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் நிலையில், வட கொரியாவின் இந்தக் கப்பல் தொலைந்து போயுள்ளது.
தங்கள் நாட்டிற்குள் நுழைவதற்கான அறிகுறிகள் தென்பட்டால்கூட, முன்கூட்டியே தாக்குதல் நடத்துவோம் என வட கொரியா தெரிவித்திருக்கிறது.