(காரைதீவு நிருபர் சகா)
சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனைக்கு இவ்வாரம் ஒரேதடவையில் 05 உத்தியோகத்தர்கள் நியமனம்பெற்றுள்ளனர்.இரு உத்தியோகத்தர் நியமன அடிப்படையிலும் ஏனைய மூவரும் இடமாற்றஅடிப்படையிலும் வலயத்திற்குவந்துசேர்ந்துள்ளனர் .
கோட்டகல்விப்பணிப்பாளராக சபூர்தம்பி கடமையேற்பு!
கிழக்குமாகாண கல்வியமைச்சினால் சம்மாந்துறைக் கோட்கல்விப்பணிப்பாளராக எம்.ஏ.சபூர்தம்பி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்றுமுன்தினம் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
சம்மாந்துறைக்கோட்டக்கல்விப்பணி ப்பாளர் ஜ.ஏ.றசூல் ஓய்வுபெற்றதையடுத்து பிரதிக்கல்விப்பணிப்பாளர் எம்.எச்.எம்.பாறூக் பதில் கடமை புரிந்துவந்தமை குறிப்பிடத்தக்கது.
கணக்காளர் கேந்திரமூர்த்தி கடமைப்பொறுபேற்பு.!
திருக்கோவில் வலயக்கல்விப்பணிமனையின் கணக்காளராக் கடமையாற்றிய காரைதீவைச்சேர்ந்த எம்.கேந்திரமூர்த்தி சம்மாந்துறை வலயக்கல்விப்ணிமனையின் கணக்காளராகக்கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இங்கு 3வருடங்கள்பணியாற்றிய கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக் கல்முனை மாகரசபைக்கு இடமாற்றம் பெற்றுச்சென்றுள்ளார்.
பிரதிக்கல்விப்பணிப்பாளர் நிதர்சினி கடமைப்பொறுப்பேற்பு!
கல்குடா வலயத்திலிருந்து இடமாற்றலாகி சம்மாந்துறைவலயத்திற்கு வந்துள்ள பாண்டிருப்பைச்சேர்ந்த செல்வி எஸ்.நிதர்சினி தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
இவருக்கு கல்விஅபிவிருத்திப்பிரிவு ஒப்படைக்கப்பட்டுள்ளது.ஏலவேயிரு ந்த பிரதிக்கல்விப்ணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் 06மாதகால புலமைப்பரிசில்பெற்று பிரான்ஸ் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிருவாகஉத்தியோகத்தர் கடமைப்பொறுப்பேற்பு!
கடந்த இரு மாதங்களாக நிருவாக உத்தியோகத்தரின்றி இயங்கிய சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனைக்கு கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையில் கடமையாற்றிய மருதமுனையைச்சேர்ந்த எம்.ஜ.எம்.முஸரப் இடமாற்றலாகிவந்து கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
இங்கு கடமையாற்றிய ஆரிப் ஜனவரி முதலாம்திகதி தமது இடமாற்றத்தை ஏற்று சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இரண்டுமாதகாலமாக நிருவாக உத்தியோகத்திரின்றி இயங்கும் சம்மாந்துறை வலயக்கல்விபணிமனை என்ற செய்தி வீரகேசரியில் வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிங்கள ஆசிரியஆலோசகராக சத்தார் கடமையேற்பு!
சம்மாந்துறை வலய சிங்களபாட ஆசிரியஆலோசகராக சாங்ந்தமருதைச்சேர்ந்த எம்.எம்.அப்துல் சத்தார் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஏலவே இங்கு பலகாலம் பணியாற்றிய என்.எம்.புவாட் ஓய்வில்சென்றதையடுத்து இப்பதவி வெற்றிடமாகவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
