வங்கதேசத்தில் கடந்த ஆறு நாட்களுக்கு முன்பாகக் காணமல்போன இணைய நிபுணர் ஒருவர் மர்மமான முறையில் வீடு திரும்பியுள்ளார்.
வங்கதேச வங்கியின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தன்வீர் ஹசன் ஜோஹா கேள்வியெழுப்பியிருந்தார்.
இணைய பாதுகாப்பு விவகாரங்களில் நிபுணத்துவம்மிக்க தன்வீர் ஹசன் ஜோஹா என்ற அந்த நபர், நண்பருடன் சென்றுகொண்டிருந்தபோது, துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார்.
வங்கதேசத்தின் மத்திய வங்கியின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கடுமையான விமர்சனங்களை ஜோஹா முன்வைத்த நிலையில், இந்த சம்பவம் நடைபெற்றது.
தற்போது, அந்த நபர் விமான நிலையத்திற்கு அருகில் சுற்றித் திரிந்ததாகக் கூறி, காவல்துறையினர் அவரை நபரை வீட்டில் விட்டுச் சென்றுள்ளனர்.
தான் காணாமல் போனது குறித்தும், அதற்குக் காரணமானவர்கள் குறித்தும் பேச முடியாத அளவுக்கு அவர் பலவீனமாக இருப்பதாக ஜோஹாவின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
அமெரிக்க மத்திய வங்கியில் உள்ள வங்க தேச மத்திய வங்கிக் கணக்கிலிருந்து நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் பணம் இணையக் கணக்கைப் பயன்படுத்தித் திருடப்பட்டது.

